பதிவு செய்த நாள்
10
ஜூன்
2016
11:06
காரைக்கால்: காரைக்கால் வரிச்சிக்குடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா
தேவி, மகா வாராஹி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால்
கோட்டுச்சேரி அடுத்த வரிச்சிக்குடி கிராமத்தில், மகா பிரத்தியங்கிரா தேவி,
மகா வாராஹி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ÷ நற்று காலை நடந்தது.
இக்கோவிலில் சிம்ம கணபதி, வராஹி தேவி, மகா பிரத்தியங்கிரா தேவி, சூலினி
துர்கா, கால பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனித்தனியாக சன்னிதி
அமைக்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி,
விக்னேஸ்வர பூஜை, நவக்கிர ÷ ஹாமமும், கடந்த 7ம் தேதி சாந்தி ஹோமம் மற்றும்
திசா ஹோமமும், நடந்தது. நேற்று முன்தினம், யாக பூஜைகள் ஹோமங்கள்
அஷ்டபந்தன ம ருந்து சாத்துதல் நடந்தது. நேற்று, கடம் புறப்பாடு மற்றும்
அனைத்து விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாக அறங்காவலர்கள்
மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.