சிங்கம்புணரி: எஸ்.செவல்பட்டியில் படைத்தலைவி அம்மன் கோயில் அம்மன் எடுப்பு,புரவி எடுப்பு விழா நடந்தது.முதல் நாள் கோயில் வீட்டிலிருந்து அம்மன்,புரவிகள் பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டன.சாமியாட்டம் நடந்தது.கிடா பலியிட்டு கிராமப் பொங்கல் வைக்கப்பட்டது. மறு நாள் புரவி பொட்டலிலிருந்து அரன்மணைப் புரவி,நேர்த்தி புரவிகள் குரும்ப ஐயனார்,சித்த ஐயனார்,நான்கு கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.