பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
11:06
அவிநாசி: அவிநாசி அருகே, மல்லிகார்ஜூன சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நம்பியாம்பாளையம் ஊராட்சி, ஆரிக்கவுண்டம்பாளையத்தில், பிரம்மராம்பிகை உடனமர் உஜ்ஜைனி மல்லிகார்ஜூன சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. கோவில் அருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், நான்கு கால யாக பூஜை செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர், கோபுர கலசங்கள் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. காயத்ரி பீடாதீஸ்வரர் ஸ்ரீதயானந்தபுரி சுவாமி தலைமையிலும், செவ்வேலார் குலகுரு ஸ்ரீவீரய்ய சுருளிநாத சுவாமி முன்னிலையிலும், கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நந்தகுமார் குழுவினரின் செண்டை மேளம், தேச மங்கையற்கரசி சொற்பொழிவு, திருப்பூர் சதாசிவம் குழுவினர் பக்தி இன்னிசை நடைபெற்றது.