வெங்கடாசலபதி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2016 12:06
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோயில் ஆனிப்பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ரெங்கநாதபட்டர் கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்தார். விழா நாட்களில் சுவாமி பல்லக்கு, கருடவாகனம், குதிரைவாகனம் உட்பட பல வாகனங்களில் திருவீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஜூன் 20ல் நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சொர்ணாம்பாள், கோயில் எழுத்தர் கருப்பசாமி, உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.