கோவை: கோவை சாரதாம்பாள் கோவிலில், ’சுந்தரகாண்டம்’ நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கோவை ஆர்ய வைத்திய சாலை தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஸ்ரீ நாட்டிய நிகேதன் நாட்டிய பள்ளி மற்றும் சென்னை முத்ராலாயா நாட்டிய பள்ளி சார்பில், நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளி இயக்குனர் மிருதுளாரை கூறுகையில், ”ராமாயணத்தில் உள்ள, ஒவ்வொரு காண்டத்தையும் நாட்டிய நாடகமாக நடத்தி வருகிறோம். இந்த மாதம் சுந்தரகாண்டத்தை நாட்டிய நாடகமாக அரங்கேற்றி இருக்கிறோம். தொடர்ந்து அடுத்தடுத்த காண்டங்களையும், அரங்கேற்ற இருக்கிறோம்,” என்றார்.