திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள நடைபாதையில், இருபுறமும் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மலைக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக நுழைவு நடைபாதையில் நிழற்குடை உள்ளது. இந்த வழியாக பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில், நடைபாதையை பழ வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். வியாபாரிகள் பழங்களை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.