பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
12:06
பொன்னேரி: கரி கிருஷ்ண பெருமாள் கோவில் தேர் கட்டடத்திற்கு, 7.5 லட்சம் ரூபாயில் ‘ஷட்டர்’ அமைக்கும் பணிகள் துவங்கப்பட் டுள்ளன. பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலின், 32 அடி உயர மரத்தேர், தேரடி சந்திப்பில் உள்ளது. நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேருக்கு, பாதுகாப்பு கட்டடம் உள்ளது. பிரம்மோற்சவத்தின்போது, பாதுகாப்பு கட்டடத்தில் இருந்து வெளியில் கொண்டு வரப்படும் தேர், திருவிழா முடிந்ததும், மீண்டும் உள்ளே நிறுத்தி வைக்கப்படும். பாதுகாப்பு கட்டடத்தின் இரு புறமும் திறந்த வெளியாக இருப்பதால், மழை வெயிலில் தேர் பாழாவைத தடுக்க, ஒவ்வொரு ஆண்டும், 10 ஆயிரம் ரூபாய் செலவில் அதற்காக, தார்பாய் போட்டு மூடி வைக்க வேண்டி உள்ளது. தற்போது, தனியார் பங்களிப்பில், 7.5 லட்சம் ரூபாய் செலவில், இரும்பு ‘ஷட்டர்’ அமைக்கப்பட உள்ளது. மோட்டார் மூலம் ‘ஷட்டைர’தூக்கி இறக்கும் வைகயில், நவீனமாக இது அமைகிறது. இதற்காக, கட்டடத்தின் இரு புறமும் சாரம் அமைத்து, இரும்பு தள வாடங்கள் பொருத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன.