பதிவு செய்த நாள்
28
ஜூன்
2016
05:06
வழிபாட்டில் எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது. இப்படி எச்சில் படாத, மீதமாகாத பொருளான வாழைப்பழத்தை இறைவனுக்கு படைத்து அவனது அருளைப்பெறும்படி முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
வாழைப்பழத்தில் மட்டுமல்ல தோலிலும் அதிக நன்மை இருக்கிறது..!
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேய்த்தால் எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது. ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும். மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேய்த்தால் போதும்.