வீட்டில் குப்பைகளை விளக்கு வைத்த பின்னர் வெளியில் போடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2016 05:07
அந்தக் காலம் முதல் வீட்டில் சேர்ந்த குப்பைகளை விளக்கு வைத்த பின்னர், வெளியில் கொண்டு கொட்டக் கூடாது என்பது, நம் பழக்கத்தில் உள்ளது. காரணம், தற்போது போன்று அக்காலங்களில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் வெளிச்சம் என்பது மிகவும் குறைவாக இருக்கும். இருட்டில் குப்பைகளோடு சேர்த்து நல்ல பொருட்களையும் கொண்டு போய், நம்மை அறியாமல் வெளியில் கொட்டி விடுவோம், இல்லையா? இந்தக் காரணத்தால் இந்தப் பழக்கம் வந்திருக்கலாம். எப்படியோ, விளக்கு வைத்த பிறகு வீட்டில் சேர்ந்த குப்பைகளை வெளியில் கொண்டு கொட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது.