திருக்கருகாவூருக்கு அருகில் உள்ள காவளூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் 12 திருக்கரங்களுடன் வள்ளி- தெய்வானை சமேதராக அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 12 ராசிகளும் 12 படிகளாக அமைந்த இத்தலத்தை தரிசித்தால் ஒரு மகாமகம் கண்ட புண்ணியப் பலன் கிடைக்கும் என்பர்.