ஆலயத்துக்கு சென்றால் நம் கவனம் போதகரின் பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் சிலர் அதைக் கவனித்துக் கேட்பதில்லை. பக்கத்தில் இருப்பவரிடம் வேறு எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் துõங்கி வழிகிறார்கள். சிலருக்கு பிரசங்கம் போரடிக்கிறது. யார் பிரசங்கத்தை ஊன்றி கவனித்து, தேவ வார்த்தையைக் கேட்கிறாரோ, அவர்கள் மனதை கர்த்தர் குளிரச்செய்வார். ஆண்டவரின் சன்னிதானத்துக்கு சென்றால் அவரிடம், “கர்த்தரே! என்னோடு கூட பேசும். உம்முடைய ஞானமான ஆலோசனைகளை எனக்குத்தாரும். உம்மை எண்ணும் என் இருதயம் குளிர வகை செய்யும்,” என்று முழுமனதோடு ஜெபியுங்கள். அவரிடம் உங்கள் பாரங்களை இறக்கி வையுங்கள். அவர் நம்மை அவரோடு அணைத்துக் கொள்வார்.