தோர்பி+கர்ணம்=தோர்பிக்கர்ணம். இதுவே மருவி பிற்காலத்தில் தோப்புக்கரணமாகி விட்டது. தோர்ப்பி என்றால் இரு கைகள்; கர்ணம் என்றால் காது. இரு கைகளாலும் காதுகளைப்பிடித்து ஐந்து முறை உட்கார்ந்து எழுதலே தோப்புக்கரணம். இது ஒருவிதமான நாட்டிய பாவனை. விநாயகருக்கு நாட்டியம், கீதம் என்றால் மிகவும் பிரியம். அதிலும் தோப்புக்கரணத்தால் உள்ளம் மகிழ்ந்து நமது தவறுகளை மன்னித்து வேண்டிய வரங்களை வழங்குவார்.