சிவனையும், சக்தியையும் ஆணும், பெண்ணுமாக புராணங்களில் தனித்தனியாக சித்தரித்து விட்டதால் இந்த எண்ணம் ஏற்பட்டு விட்டது. உண்மையில் சிவசக்தி இரண்டும் வெவ்வேறானவர்கள் அல்ல. சிவ சக்தி ஐக்கியமே இந்த உலகம். ஆதாரமாக நின்று இயக்குவது சக்தி என்றால், அந்த அதைத் தாங்கி நிற்பது சிவம். உடலும், உயிருமாக போல இருக்கும் சிவசக்தி ஒன்றை விட்டு ஒன்று ஒருபோதும் இயங்காது.