பதிவு செய்த நாள்
08
ஜூலை
2016
11:07
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. கடலுார் தி ருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (8ம் தேதி) காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கிறது. நாளை 9ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், இரவு 8:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும், 11ம் தேதி காலை 7:00 மணிக்கு ராஜகோபாலன் ÷ சவையிலும், இரவு 8:00 மணிக்கு யானை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி காலை 7:00 மணிக்கு வேணுகோபாலன் ÷ சவையிலும், இரவு 8:00 மணிக்கு பரமபதநாதன் சேவையிலும், 13ம் தேதி காலை 7:00 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு 7:00 மணிக்கு தங்க கருட வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 14ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், பூர்ணாகுதி, கும்பப்ரோக்ஷணம், 15ம் தேதி காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 16ம் தேதி சிறப்பு பொம்மலாட்டம் நடக்கிறது.