பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
04:07
சவாலுக்கு சவால் விடும் விருச்சிக ராசி அன்பர்களே! (மகிழ்ச்சி நிலைக்கும்)
சுக்கிரனால் ஆக.1 வரை நன்மை உண்டாகும். புதன் ஜூலை 24ல் சிம்ம ராசிக்கு இடம் மாறியதும் நன்மை வழங்குவார். தற்போது குரு ராசிக்கு 10ல் இருப்பது சிறப்பானது அல்ல. ஆனால் அவர் ஆக.2ல், 11-ம் இடத்திற்கு வந்தபின் பொருளாதார வளம் பெருகும். சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடந்தேறும். குடும்பத்தில் பின்தங்கிய நிலை மறையும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். புதனால் பொன், பொருள் சேரும். சகோதரிகளால் உதவி கிடைக்கும். ஜூலை 16,17,ஆக.12,13 தேதிகளில் அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்க யோகம் உண்டு.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உயரும். பெண்களை பங்குதாரராகக் கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை சிறக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.
பணியாளர்களுக்கு மாத பிற்பகுதியில் குரு, புதனின் பலத்தால் நன்மை உண்டாகும். சிலர் திடீர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம். வேலைப்பளு குறையும்.
கலைஞர்களுக்கு ஆக.1க்கு பிறகு தொழிலில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த புகழ் கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி பெறுவர்.
மாணவர்கள் முயற்சியுடன் படிப்பது அவசியம். புதன்,குரு சாதகமாக இருப்பதால் வெளிநாட்டில் படிக்க வாய்ப்புண்டு. ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் கல்வி வளர்ச்சி காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே கிடைக்கும்.
பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நன்மை அடைவர். ஆடும்பர பொருட்கள் வாங்கி மகிழ்வர். பெண்களுக்கு உடல்நலத்தில் அக்கறை தேவை.
நல்ல நாள்: ஜூலை 16,17,20,21,27,28,29,30, ஆகஸ்ட் 4,5,6,7,8,12,13,16
கவன நாள்: ஜூலை 31, ஆக. 1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: விநாயகரை தினமும் வணங்குங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்கள்.