Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயருக்கு ஜாங்கிரி மாலையை ... அமிர்த கலசத்துடன் சுவாமி ஐயப்பன்! அமிர்த கலசத்துடன் சுவாமி ஐயப்பன்!
முதல் பக்கம் » துளிகள்
அன்னை தந்த ஐந்து காசு!
எழுத்தின் அளவு:
அன்னை தந்த ஐந்து காசு!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
05:07

தொண்ட மண்டல சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார் சதகம், செயங்கொண்டார் சதகம் என சதக நுõல்கள் பல உண்டு.  தமிழகத்தின் கலாசாரம்,  பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பலவிதமான அபூர்வ தகவல்கள் இந்த நுõல்களில் இடம் பெற்றிருக்கும். இவற்றில்  தொண்ட மண்டல சதகத்தை எழுதியவர் படிக்காசுப்புலவர். கல்வியில் தலைசிறந்த இவர்,ஊர் ஊராகப் போய், அனைவருக்கும் நல்வழிகாட்டி  அறிவைப்புகட்டி வந்தார். சிலர் கேட்டுத் திருந்தினார்கள். பலர் இவரைக் கேலி செய்தார்கள். அவர்களை எண்ணி புலவர் மனம் வருந்தினார்.   ‘‘ஒளிவீசும் விளக்குகள் ஏராளமாக இருக்க, அத்தனையையும் அணைத்துவிட்டு, இவர்கள் வெளிச்சத்தைத் தேடி அலைகிறார்களே!’’ என்ற ÷ வதனையுடன் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே... ஆடல்வல்லான் நடராஜரின் அற்புதத் திருக்கூத்து காட்சி கண்டு தன்னை மறந்தார். “தில்லையில்  திருக்கூத்தாடும் பரம்பொருளே! பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிக்கினும், ஞானம் வரவில்லை. மெல்லிய சல்லாபப் புடவை,  நடுராத்திரியில் குளிரைத் தாங்குமோ? நடுச்சந்தை தன்னில் செல்லாக் காசும் செல்லுமோ? தில்லைவாழ் சிதம்பரனே!’’என்று நடராஜப் பெரு மானிடம் தன் மனக்குறையை வெளியிட்டார். அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும், தன் வேண்டுகோளைச் சொன்னார். அவருடைய  நினைவை பற்பல நிகழ்வுகள் அப்படியே வந்து மூட, அவற்றை அப்படியே பாடலாக்கி, அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்தார். “அன்னையே!  உன் பிள்ளையான முருகப்பெருமானுக்கு, சூரசம்ஹாரம் செய்வதற்காக வேல் கொடுத்தாய். உன் திருக்கல்யாண வைபவத்தின்போது, அம்மியி ன்மீது வைக்க, உன் மணவாளருக்கு உன் கால்களைக் கொடுத்தாய்.

கவுணியர் குலத்தில் உதித்த திருஞான சம்பந்தக் குழந்தைக்கு, சீர்காழி  குளக்கரையில் பால் கொடுத்தாய். அனைவரையும் ஆட்டிப்படைக்க, மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். இவ்வளவு பேர்களுக்கும் இவ்வாறு  கொடுத்த நீ எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே!‘’ என்று பொருள்பட பாடினார். அவர் பாடிமுடித்த அதே வேளையில், பஞ்சாட்சரப் படிகளில்  ஐந்து தங்கக் காசுகளைப் பொழிந்தாள் அன்னை சிவகாமசுந்தரி. அனைவரும் வியந்தனர். அன்னையால் பஞ்சாட்சரப் படிகளில் காசு அளிக்கப்பட்ட  புலவர், அன்று முதல் ‘படிக்காசு புலவர்’ என அழைக்கப்பட்டார். படிக்காசு புலவருக்கு அருள்மழை பொழிந்த அன்னை சிவகாமசுந்தரி நமக்கும்  அருள்பொழிய ஆனி திருமஞ்சன நாளில் வேண்டுவோம்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.மைசூரு சாமுண்டி ... மேலும்
 
temple news
சிவனுடன் மகரிஷி ரிஷ்ய சிருங்கர், ஒளியாக கலந்து மான் கொம்பு, மீசை, தாடியுடன் காட்சியளிக்கும் சிவனை ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா பெல்தங்கடி தாலுகாவில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar