குருவாயூரப்பன் மீது பக்தி கொண்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன், கேரளாவிலுள்ள குளப்புள்ளியில் கிருஷ்ணருக்கு கோவில் எழுப்பினார். மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் வலது கையில் வெண்ணெயுடன் காட்சியளிக்கிறார். இடது கையில் கதாயுதம் இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு வெண்ணெய் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், நாகராஜர் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள ஐயப்பன் கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். ஆயுள் அபிவிருத்திக்கும், செல்வம் நிலைத்து இருக்கவும் இவரிடம் வேண்டுவது சிறப்பு. பாலக்காட்டில் இருந்து 47 கி.மீ., துõரத்திலும், குருவாயூரில் இருந்து 45 கி.மீ., துõரத்திலும் குளப்புள்ளி உள்ளது. பஸ் ஸ்டாப் பிலிருந்து 3 கி.மீ., துõரம் சென்றால் கோவிலை அடையலாம்.