செல்லம்பட்டி: செல்லம்பட்டியில் சீலைக்காரி என்ற குஞ்சம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 9 காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை குன்னுவாரன் கோட்டை விசாலாட்சி விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர் விஸ்வநாதன் குழுவினர் நடத்தினர். அன்னதானமும் நடந்தது.