கரூர்: கரூர் அருகே, கொளந்தாகவுண்டனூர் பகவதி அம்மன் கோவிலில், நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 8ம் தேதி காலை துவங்கியது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, யாககால பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 8.10 மணிக்கு கலசங்கள் மேள தாளத்துடன் கொண்டு வரப்பட்டது. பின், 8.37 மணிக்கு மஹா கும்பாபிசேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.