ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய கொடிமரம் ஜூலை 21ல் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி கொடி மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தது. புதிய கொடி மரத்திற்கான செலவை ஏற்க ’ராம்கோ’ நிறுவனம் முன் வந்தது. ரூ.5 லட்சம் செலவில் கொடிமரம் தயாராகி வருகிறது. இதையடுத்து பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்காக, நேற்று பாலாலய பூஜை நடந்தது. கொடி மரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தக்கார் குமரன்சேதுபதி, கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் பங்கேற்றனர். 40 அடி உயர கொடிமரம், ஜூலை 21ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.