காரைக்கால்: காரைக்காலில் பால ஆஞ்சநேயர் சிலையை தண்ணீரில் வைத்த போது சிவலிங்கம் உருவம் உருவானதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி சாலையில் உள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் பால ஆஞ்ஜநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்வதற்காக பால ஆஞ்சநேயர் கருங்கல் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நெல் குதிர் கொண்ட தண்ணீர் டிரம்மில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது தண்ணீரின் மேல்பகுதியில் சிவலிங்கம் வடிவம் தோன்றியுள்ளது. தண்ணீரை கலைத்து பார்த்தபோது மீண்டும் சிவலிங்கம் வடிவம் வந்துள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலை வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர்.