பதிவு செய்த நாள்
14
ஜூலை
2016
11:07
சிவகங்கை: சிவகங்கை நகரில் உள்ள கோயில்களில் நாளை பூச்சொரிதல் விழா நடக்கிறது. சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை 10.30 மணிக்கு மேல் சிறப்பு பாலாபிஷேகம்,அலங்காரம், மாலை 4.00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் அதனைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடக்கும். பகல் 12.00மணிக்கு கோயில் முன்பு அன்னதானமும் நடக்கிறது. பூத்திருவிழாவை யொட்டி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பொங்கல் வைத்தல்,மாவிளக்கு ஏற்றுதல், பிள்ளை தொட்டி கட்டுதல்,முடி இறக்குதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக சுற்றுப்பிரகாரத்தில் பிளாஸ்டிக் மேற்கூரை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
* சிவகங்கை நேரு பஜார் அன்னை வீர மாகாளி அம்மன் கோயிலில் பூக்கரக பூச் சொரிதல் விழா கடந்த 5ம்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கடந்த 10ம் தேதி திருவிளக்கு பூஜையும், 12ம் தேதி பூக்கரக விழா,பால்குடம், பொங்கல்விழா, முளைப்பாரி எடுத்தல், சிறப்பு பூஜையும், இரவு கிராமிய கலை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்றிரவு முளைப்பாரி கரைத்தல், பொது அன்னதானம் நடந்தது. நாளை மாலை நாதஸ்வர இன்னிசை, இரவு 8.30 மின்னொளியில் பூ ரதம் வலம் வருதல், கிராமிய கலை நிகழ்ச்சி, இரவு 12.00 மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.