பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
12:07
கடம்பத்துார்: கடம்பத்துார், கடம்பவன முருகன் கோவிலில், வரும் 28ம் தேதி, ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. கடம்பத்துார் அடுத்த, ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ளது கடம்பவன முருகன் கோவில், இங்கு, வரும் 28ம் தேதி, 2ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, பால்குடமும், ஒய்யாலி சேவையும் நடைபெற உள்ளது. முன்னதாக, அன்று காலை 9:30 மணிக்கு, சூர்ய அம்மன் கோவிலிலிருந்து, பால்குட ஊர்வல புறப்பாடும், காலை 10:00 மணிக்கு, கடம்பவன முருகனுக்கு பால்குட அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெறும். பின், மாலை 6:00 மணிக்கு, கடம்பவன முருகன் ஒய்யாலி சேவையும் நடைபெறும்.