கோவிலில் கொடிமரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையில் செல்லக் கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2016 12:07
கோவில் என்பது கருவறை முதல் ராஜ கோபுரம் வரையுள்ள பகுதி. இது மனித உடல் போன்றதாகும். கருவறை சிரசு எனப்படும் தலையைக் குறிக்கும். நடராஜர் எழுந்தருளியுள்ள மகா மண்டபம் இருதயத்தைக் குறிப்பதாகும். அதிலிருந்து பலிபீடம் வரை வயிறு, கொடிமரம் தொப்புள், ராஜ கோபுரம் திருவடிகள். எனவே கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலமாகச் சுற்றி எல்லா தெய்வங்களையும் முறையாக வழிபட்டு வெளியே வர வேண்டும். எங்கு குறுக்கே சென்றாலும் ஏதாவது ஒரு அங்கத்தை மிதித்த பாவம் உண்டாகும்.