கும்மிடிப்பூண்டி: விஜயநகர், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில், ஆடி பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம், முனுசாமி நகர் அருகே உள்ள விஜயநகரில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று, அக்கோவிலில், ஆடி பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு, அம்மன் வீதிஉலா நடைபெற்றது.