பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
பொன்னேரிகரை: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில், திருத்தணிக்கு, 101 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, ஆடி கிருத்திகை தோறும், காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில், பல பகுதிகளில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிகிருத்திகையை முன்னிட்டு, 26ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு, 101 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், 27 மற்றும் 28ம் தேதிகளில் போக்கு வரத்து நெரிசலுக்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படலாம் என, போக்குவரத்து துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.