வாக்கிய பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 2, காலை 9.23 மணிக்கு இவர் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2017 ஜனவரி 16 வரை (சித்திரை 2ம் பாதம்) கன்னி ராசியில் இருப்பார். பின் (சித்திரை 3ம் பாதம்) துலாம் ராசிக்கு அதிசாரமாக சென்று 2017, ஜனவரி 16 இரவு 2.55 மணி வரை தங்குகிறார். மீண்டும் கன்னி ராசிக்கு மார்ச் 11ல் திரும்பி செப்.2 வரை அங்கேயே தங்குகிறார். நவக்கிரகங்களில் முக்கியமானதாக கருதப்படுபவர் குரு. இவர் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கி இருப்பார். பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகளை செய்யவே விரும்புவார். கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அது நமக்கு ஒரு படிப்பினையை தருவதற்காகத்தான் இருக்கும்.
குரு கன்னி ராசியில் இருக்கிற காலத்தில், ராகு சிம்மத்தில் இருக்கிறார். கேது கும்பத்தில் இருக்கிறார். சனிபகவான் விருச்சிகத்தில் இருக்கிறார். சிலருக்கு குருபகவான் சாதகமான நிலையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மற்ற முக்கிய கிரகங்கள் சுபமாக இருந்தால் அவற்றின் மூலமாக நன்மை நடக்கும். மேலும் வாசகர்கள் இன்னொரு அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பணத்தைக் கொட்டித்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களால் இயன்றதை செய்தால் போதும். இதனால் கெடுபலன்கள் குறைந்து நன்மை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
குரு பெயர்ச்சியால் நல்ல பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், துலாம், தனுசு பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, கும்பம்
12 ராசியினரும் படிக்க வேண்டிய குரு பாடல்:
ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருளிச் செய்து நுõலின்கீழ் அவர்கட்கெல்லாம் நுண்பொருளாகி நின்று காலின்கீழ் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும் பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே.