நவக்கிரக மண்டபத்தில் குரு பகவான் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய திசை வடக்கு. ஆனால் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இவர்கள் இருவரும் வெவ்வேறு வடிவினர். வேத நாயகனான சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு சனகாதி முனிவர் நால்வருக்கும் வேதங்களை உபதேசிக்கிறார். ஆனால் குருபகவான் தன் மனைவி தாரையுடன் நவக்கிரக மண்டபத்தில் இருப்பார். ஒரு சில கோவில்களில் மட்டுமே தம்பதி சமேதராக குருவைத் தரிசிக்க முடியும். தட்சிணாமூர்த்தி உபதேசம் செய்வதால் குரு அந்தஸ்து பெறுகிறார்.