பழநி: பழநி மலைக்கோயிலில் திருவாசக முற்றோதல் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் ஆண்டு துவக்கவிழா நடந்தது. ஒவ்வொரு அமாவாசைதோறும் இவ்வமைப்பின் சார்பில் மலைக்கோயில் கச்சேரி மண்டபத்தில் திருவாசக முற்றோதல் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இந்தாண்டு துவக்கவிழாவிற்கு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். பொருளாளர் மயிலாத்தாள், செயலாளர் நடராஜன், பழநி சம்பந்தசரணாலய அடிகள் முத்துசாமி முன்னிலைவகித்தனர். திருப்பூர் சைவ சித்தா சபை தலைவர் ஆறுமுகம், ஞானபாரதி அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் திருவாசக பக்தி சொற்பொழிவு நடந்தது.