பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
12:07
பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தர்யநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா கொடியே ற்றத்துடன் துவங்கியது. ஆக., 10 வரை விழா தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 6.௦௦ மணிக்கு அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றபட்டது. தினமும் காலை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கு, அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை, காமதேனு ஆகிய வாகனங்களில் வீதியுலா வருகிறார். ஆக., 4ம் தேதி காலை 7.30 மணிக்கு அம்மன் தேரோட்டம், ஆக.,6ம் தேதி அம்மன் தபசு மண்டபத்தில் எழுந்தருளி மாலைமாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக., 7ம் தேதி காலை நாகநாதசுவாமிக்கும் சவுந்தர்யநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு மின்சார தீப அலங்கார கோ ரதத்தில் சுவாமியும், தென்ன ங்குருத்து சப்பரத்தில் அம்மனும் வீதியுலா வருகின்றனர். ஆக.,10 ம் தேதி இரவு கொடி இறக்கப்பட்டு ஆடிப்பூர விழா நிறைவடைகிறது. ஆக. 14ல் உற்சவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரிநாச்சியார், திவான்மகேந்திரன், மண்டல பொறுப்பாளர் வைரசுப்பிர மணியன் செய்துள்ளனர்.