கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் உட்காருவது கட்டாயமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2016 01:07
கோவிலுக்குச் சென்று எல்லா சுவாமிகளையும் தரிசிக்கிறோம். ஒவ்வொரு சுவாமியிடத்திலும் விதவிதமான பிரச்னைகளைக் கூறி எவ்வளவோ வரங்களைக் கேட்கிறோம். இவை முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்தால் தான், கோவிலுக்குச் சென்ற நிம்மதி கிடைக்கும். அதற்காக சிறிது நேரம் அ ங்கேயே உட்கார்ந்து, கண்களை மூடி நம் கஷ்டங்களையெல்லாம் எல்லா சுவாமியிடத்திலும் சொல்லி விட்டோம். இனி அவர் பார்த்துக் கொள்வார். நல்லதே நடக்கும் என்று சிந்தித்து விட்டு வீடு திரும்பினால் ஒரு புத்துணர்ச்சியுடன் கிளம்பலாம்.