பதிவு செய்த நாள்
04
ஆக
2016
12:08
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மகா நவ சண்டியாகம் நடக்கிறது. நாளை காலை, 10.30 மணிக்கு கணபதி ஹோமம், 12 மணிக்கு பூர்ணாகுதி, மாலை, 4 மணிக்கு நீர்குடம் புறப்படுதல், மாலை, 6 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு, 7 மணிக்கு கலசஸ்தாபனம், கலச பூஜை ஆகிய நிகழ்ச்சிகளும், 6 ம் தேதி காலை, 8 மணிக்கு, கலச பூஜை, ருத்ர ஹோமம், 10 மணிக்கு, மகா நவ சண்டியாகம், 12 மணிக்கு, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 7 ம் தேதி மதியம், 1.30 மணிக்கு, நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.