பதிவு செய்த நாள்
06
ஆக
2016
02:08
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, 5,008 பால்குட அபிஷேகம் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. மூன்றாம் வெள்ளிக்கிழமையான (5.8.16), சுற்றுவட்டார பொதுமக்களும், காவிரியில் இருந்து 5,008 பால்குடம், தீர்த்தக்குடம் அக்னிச்சட்டி எடுத்து பம்பை, உடுக்கைகள் முழங்க ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.