சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் முத்துமாரியம்மன் கோவில் கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. வீரமுடையாநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழாவைத் தொடர்ந்து, கோவிலில் 27 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக அதற்கான பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, நாடிசந்தானம், பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் மூலவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விழாக் குழுத் தலைவர் சிட்டிபாபு தலைமையில் தாங்கி கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.