சிவபக்தராக சைவத் தொண்டராக இருந்த விசாரசருமர் என்ற அந்தணர் தமது தீவிர சிவபக்தி காரணமாக சிவனின் அருள் பெற்றுத் தெய்வாம்சம் பெற்றார். இவர் சண்டேசுவரர் எனப் பெயர் பெற்றார். இவருடைய திருஉருவம் சிவன்கோயில்களில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இவருக்கும் மக்கள் வழிபாடு நடத்துகின்றனர்.