Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யது வம்சத்தினர் வணங்கும் சோமேஸ்வரர் அவிதவா நவமி, பாஞ்சராத்திர ஜெயந்தி; மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசம்! அவிதவா நவமி, பாஞ்சராத்திர ஜெயந்தி; ...
முதல் பக்கம் » துளிகள்
மகாபரணி; தவறவிடக் கூடாத நாள்.. முன்னோரை வழிபட பாவங்கள் அனைத்தும் நீங்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாபரணி; தவறவிடக் கூடாத நாள்.. முன்னோரை வழிபட பாவங்கள் அனைத்தும் நீங்கும்!

பதிவு செய்த நாள்

11 செப்
2025
05:09

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 21 வரை மகாளய பட்ச காலமாகும். இந்நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். 


மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் துாய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது. இந்தக் காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தலங்களுக்கு செல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து ‘காசி காசி’ என்று செல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள்ளும், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும். 


இதில் மகாபரணி மற்றும் மத்யாஷ்டமி தினங்கள் முக்கியமானவை. திதிகள் எது என்று அறியாதவர்கள் இந்த நாள்களில் பித்ரு காரியங்களைச் செய்வது சிறப்பு. நாளை (செப்.12) மகா பரணியும், மத்யாஷ்டமி செப்.14  அன்றும் வருகின்றன. இந்த நாட்களில் செய்யும் பித்ரு காரியங்கள் உரிய ஆத்மாக்களுக்கு சென்றடையும். இந்த நாளில் வீட்டில் தவறாமல் முன்னோர்களை நினைத்து வழிபட அவர்களின் ஆசி கிடைக்கும். இந்நாளில் முன்னோர்களின் பெயரை உச்சரித்தாலும் உயர்வு கிடைக்கும்!

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar