ஸ்ரீவில்லிபுத்துார்: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் (ஆக.,12) வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தனர். உற்சவர் மாரியம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் கூழ்காய்ச்சி படைத்து, அம்மனை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து சென்றனர்.