பதிவு செய்த நாள்
16
ஆக
2016
10:08
திருப்பதி: திருமலையில் உற்சவ மூர்த்திகளுக்கு, பவித்ர மாலை அணிவிக்கப்பட்டது. திருமலை ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்களில் ஏற்படும் குறைகள், தோஷங்களை நீக்க, மூன்று நாட்கள் நடத்தப்படும் பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, பல வண்ண பட்டு நுாலிழைகளால் ஆன, பவித்ர மாலைகளை அர்ச்சகர்கள் அணிவித்தனர். தொடர் விடுமுறையால், திருமலையில், பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. நேற்று முன்தினம், ஒரு லட்சம் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்தனர். உண்டியல் காணிக்கையும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.