சிவகங்கை: சிவகங்கை நேரு பஜார் நாடார் பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில், தர்மரஷ்ண ஸமிதி சார்பில் ராமாயண தொடர் உபந்நியாசம் நடந்தது. தொடர்ந்து பட்டாபிஷேக விழா நடந்தது. தர்மரஷ்ண ஸமிதி மாவட்டத் தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாண்டித்துரை, தொழிலதிபர் சண்முகநாதன் வாழ்த்தி பேசினர். முத்துவடுகநாத சிவம் ஆன்மிக உரையாற்றினார். ராம, அனுமன் ஊர்வலம் வந்தன.