வேதங்களின் தாயே காயத்ரி தேவி. காயத்ரி மந்திரம் சொல்லப்படும் இடங்களில் இந்த தேவி இருப்பாள். இவளுக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. இவள் ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகிறது காயத்ரி மந்திரம். இது வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். இதைச் சொல்வதால் மனம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள். – செல்வராஜ்