குடிப்பவர்களில் ஒரு பகுதியினரை கேட்டால், “என் மனதில் தீராத கவலை இருக்கிறது. அதை மறக்கவே குடிக்கிறேன்,” என்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி காரணமாக குடிப்பவர்களிடம் கேட்டால், சந்தோஷத்திற்காக குடிக்கிறோம், டென்ஷனைக் குறைக்க குடிக்கிறோம் என்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களுமே சரியானதல்ல. ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலையும் குறையப் போவதில்லை, சந்தோஷமும் வரப்போவதில்லை. ஏனெனில் இருதரப்புமே குடல் போச்சு. இருதயம் போச்சு. சிறுநீரகம் போச்சு என்று மருத்துவமனைகளை நாடித்தான் வரவேண்டியிருக்கும். மெய்யான சந்தோஷம் எது என்பதற்கு பைபிளில் விடை இருக்கிறது. மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை (இருதயம்) ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்(நீதி.12:25) என்பது ஒரு வசனம். நல்வார்த்தை என்பது ஆண்டவருடைய கட்டளைகளைக் குறிப்பிடுகிறது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்ற வசனமும், அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவே மெய்யான சந்தோஷத்தை, மகிழ்ச்சியைத் தர முடியும் என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றன. ஆம்.. கர்த்தரின் கட்டளைகளை மதியுங்கள். பணத்தை நல்ல வழியில் செலவிடுங்கள். ஏழைகளை கை தூக்கி விடுங்கள். இதை விட்டு மகிழ்ச்சி என்ற பெயரில் கேடுகளை விலை கொடுத்து வாங்காதீர்கள்.