ஒரு வாலிபர் வண்டியில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி கால்களை இழந்தார். மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்பிரிக்கா சென்ற போது. காட்டுவாசிகள் அவரைக் கடத்திச்சென்றனர். அவர்களின் தலைவன், “இவனது மாமிசத்தை உண்போம். முதலில் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்,” என உத்தரவிட்டான். காட்டு மிராண்டிகள் வாலிபனை நெருங்கினர்.அவரது கால்களை வெட்ட முயன்ற போது, உள்ளே ஏதோ கடினமான பொருள் இருப்பதை பார்த்தனர். அங்கு காலுக்கு பதிலாக கட்டை இருந்ததைப் பார்த்து பயந்து விட்டனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களது தலைவனிடம் வாலிபனின் காலிற்குள் ஏதோ கட்டை இருப்பதாக கூறினர். தலைவனும் ஏதும் புரியாமல் வாலிபனுக்கு அருகில் வந்து பார்த்தான். அவனுக்கும் பயம் உண்டானது. தாங்கள் கடத்தி வந்திருக்கும் வாலிபன் சாதாரண மனிதப்பிறவி அல்ல என்றும், அவன் ஏதோ தெய்வப்பிறவி என்றும் நினைத்தனர். தலைவன் காட்டுமிராண்டிகளிடம் “இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ கடவுள் போல இருக்கிறார். ஆகவே, இவரை வெட்டாதீர்கள்,” என்றதோடு, வாலிபரையே குருவாகவும் ஏற்றுக் கொண்டான். அதன்பின் அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி வந்தார். நாம் பலவீனமாக நினைப்பவைகூட, கர்த்தரின் கிருபையால் நமக்கு நன்மையையே தருகின்றன. கடவுள் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை. அவர் தற்காலிகமாக தரும் தண்டனை கூட, பின்னால் வரப்போகும் தீமைகளை எதிர் கொள்வதற்காகவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.