பதிவு செய்த நாள்
17
ஆக
2016
12:08
சிதம்பரம்: சி.வக்காரமாரி மாரியம்மன் கோவில் ஆடி உற்சவத்தையொட்டி நடந்த தீ மிதி விழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காத்தவராயன் கதை சொற்பொழிவு, திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் செடல் உற்சவம் நடந்தது. மாலை தீமிதி உற்சவத்தையொட்டி, பூங்கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு மாரியம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் சண்முகம், கிராம தலைவர்கள் தர்மலிங்கம், ராமசாமி, ராஜேந்திரன், மணிமாறன், விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் செய்தனர்.