பதிவு செய்த நாள்
19
ஆக
2016
12:08
கொளத்தூர்: கொளத்தூர் அடுத்த, கோட்டையூர் மாரியம்மன் கோவில் பண்டிகை, மூன்று நாட்களாக நடக்கிறது. நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்தனர். நேற்று மாலை அம்மனை வாகனத்தில் ஏற்றி, நிர்வாக குழுவினர் வீதி உலா செல்ல தயாராகினர். அம்மன் ரதம் கோட்டையூர், காவேரிபுரம், தெலுங்கனூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு வீதி உலா செல்ல வேண்டும். அம்மன் வருகையை எதிர்நோக்கி கிராமங்களில் பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, ஒரு தரப்பினர் கோவில் உண்டியல் பணத்துக்கு கணக்கு காட்டினால் மட்டுமே, அம்மனை பிற கிராமங்களுக்கு எடுத்து செல்ல அனுமதிப்போம் என கூறினர். இதனால், இரவு, 9 மணி வரை கோவிலை விட்டு அம்மன் வெளியே செல்லவில்லை. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், அம்மன் வீதி உலாவை போலீசார் தற்காலிகமாக நிறுத்தியதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.