கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது கிருஷ்ணன்கோயில் என்ற ஊர். இங்கு அழகான கிருஷ்ணர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் இங்கு அமைந்துள்ளதாலேயே, அந்த ஊருக்கு கிருஷ்ணன் கோவில் என பெயர் வந்தது. இங்கு உள்ள மூலவர் பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் நின்றபடி காட்சி அளிக்கிறார். அவர் தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துள்ளார். கிழக்கு பார்த்த வண்ணம் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இவரை தம்பதி சமேதராக வந்து தரிசித்து வேண்டிக்கொண்டால் மழலை பாக்கியம் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.