பதிவு செய்த நாள்
24
ஆக
2016
12:08
திருக்கழுக்குன்றம்: நெரும்பூர்ஊராட்சி, பட்டரைக்கழனி கிராமத்தில் அமை ந்துள்ள க ங்கையம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் ஊராட்சி, பட்டரைக்கழனி கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த மாதம், 20ம் தேதி கணபதி பூஜையுடன் விழா ஆரம்பித்தது. தொடர்ந்துஏழு யாகசாலை பூஜைகள் மற்றும் பல வழிபாடுகள் நடந்தன.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கோபுர கலசங்கள், மூலவர்கள், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.