Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் ... தேய்பிறை அஷ்டமி: பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை தேய்பிறை அஷ்டமி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேனி கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
12:08

தேனி: தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பெரியகுளம்: பெரியகுளத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டனர். பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, பெருமாள், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

* லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில், உற்சவர் லட்சுமிநாராயணப்பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. * பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோபூஜையில் துவங்கி, மகாமந்திர நாம கீர்த்தனம் உள்ளிட்டவை நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், கிருஷ்ணரை தலையில் சுமந்தபடி வீதி உலா சென்றார். தொடர்ந்து கிருஷ்ணருக்கு விசேஷ திருமஞ்சனம், 52 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜை, கிருஷ்ணலீலைகள் உபன்யாஸம் நடந்தது. கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஸ்ரீ குருஜியின் கீர்த்தனைகள், குழந்தைகளுக்கான அலங்காரப் போட்டி, கிருஷ்ணன் புறப்பாடு மகமாந்திர நகர கீர்த்தனம், டோலோத்ஸவம் ஆகிய 8 வகையான நிகழ்ச்சிகள் நடந்தது. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணன், ராதை வேடத்தில் வந்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.

* போடி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சிறுவர்களுக்கு கிருஷ்ணன், ராதை வேடம் அணிவதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த வேடமிட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar