பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
செம்பட்டி: கோகுலாஷ்டமியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சின்னாளபட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கையில் தங்க புல்லாங்குழல், தங்க கொலுசு, ஒட்டியாணம், அரைஞாண்கயிறு, முத்துமாலை, தலையில் மயில் பீலிகை, தங்கச்சரிகை பட்டு ஆடையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ராமருக்கு, வேணுகோபாலசுவாமி அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.