அர்த்த சாஸ்திரம் எழுதியவரும், இணையற்ற அரசியல் ராஜதந்திரியுமான சாணக்கியர், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே. பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில், இந்த ஆயுள் போதாது. பயம் உங்களை நெருங்கும்போது, அதனைத் தாக்கி, மூளையிலேயே நசுக்கி அழித்துவிடுங்கள். குடிவெறியைவிடக் கொடிய பாவம் வேறெதுவும் இதற்கு முன்னும் இருந்ததில்லை; இனிமேலும் இருக்கப்போவதில்லை. எந்த வேலையைத் தொடங்கும் முன்னரும் மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்த மூன்று கேள்விகளுக்கும் திருப்தியான விடைகள் கிடைத்தால், பணியைத் தொடங்குங்கள். ஆர்வமோ உற்சாகமோ இல்லையென்றால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது.