பதிவு செய்த நாள்
27
ஆக
2016
12:08
அன்னுார்: வெள்ளானைப்பட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 13ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், 108 கோமாதா பூஜையை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம், வாசுதேவன் குழுவின் நாமசங்கீர்த்த பஜனை, பிருந்தாவனம் நடந்தது. பெண்கள், சிறுவர், சிறுமியர் பாடல் பாடியபடி நடனமாடினர். பேரூர் ஆதீனம், இளையபட்டம் மருதாசல அடிகள், கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்து பேசினார். மகா தீபாராதனை நடந்தது. சுவாமி திருவீதியுலா, அன்னதானம் வழங்குதல் நடந்தது. சரவணம்பட்டி: இங்குள்ள மகாலட்சுமி விஷ்ணு கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, 48 நாட்கள் ஆனது. இதையடுத்து மண்டல பூஜை நிறைவு விழாவும் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் நடந்தது. மாலையில், பஜனை நடந்தது. சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பங்கேற்ற கோலாட்டம் நடந்தது. கிருஷ்ணர் வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. உறியடித்தல் நடந்தது.
சோமனுார் : கள்ளப்பாளையம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் பழமையானது. இங்கு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சுதர்ஸன ஹோமத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பஜனை, நடன நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு உறியடி உற்சவம் நடக்கிறது. சூலுார் : சூலுார் அடுத்த பாரதிபுரத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு அலங்கார பூஜைகள் நடந்தன. மணிகண்டன், நாகு, செயலாளர் சதீஷ், பொன்னம்பலம், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சச்சிதானந்த பள்ளி: மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் கவிதாசன் தலைமை வகித்தார். பள்ளி முதுநிலை முதல்வர் கணேசன், கண்ணபெருமானின் வாழ்க்கை வரலாற்றையும், கிருஷ்ணாவதாரத்தின் சிறப்புகளையும் விளக்கி பேசினார்.